×

நெம்பர் ஒன்தான் இலக்கு: ஹாக்கி பயிற்சியாளர் கிரெய்க்

புதுடெல்லி: இந்திய ஹாக்கி ஆடவர் அணியின் தலைமை பயிற்சியாளராக கிரஹம் ரீட்க்கு பதிலாக தென் ஆப்ரிக்காவை சேர்ந்த கிரெய்க் ஃபுல்டன்(48), இந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பெல்ஜியம் அணியின் உதவி பயிற்சியாளராக இருந்தவர் கிரெய்க். இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்திய அணியுடன் தலைமை பயிற்சியாளர் கிரெய்க் இணைந்தார். இந்நிலையில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது, ‘‘இந்திய அணி முதலில் ஆசிய அளவில் தனது ஆதிக்கத்தை செலுத்தி முதலிடம் பிடிக்க வேண்டும் என்பதுதான் எனது இலக்கு. அதற்காக ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா சாதிக்க திட்டங்களை வகுத்து வருகிறோம்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெல்வதின் மூலம், அடுத்த ஆண்டு பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதிப் பெற முடியும். இப்போது உலக அளவில் 4, 5வது ரேங்கில் இந்திய ஆடவர் அணி உள்ளது. அதனால் ஆசிய அளவில் மட்டுமல்ல உலக அளவிலும் இந்திய அணி முன்னிலை பெறுவது சாத்தியம். போதுமான அனுபவமும், வலுவான திட்டங்கள் இருந்தால் எந்த அணியையும் வீழ்த்த முடியும். கூடவே ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு முன்னதாக எப்ஐஎச் புரோ லீக் , ஸ்பெயினில் நடைபெற உள்ள 4 நாடுகளுக்கு இடையிலான ஹாக்கித் தொடர் என அடுத்ததடுத்த சர்வதேச போட்டிகளில் இந்தியா களம் காண உள்ளது’ என்று கூறினார்.

The post நெம்பர் ஒன்தான் இலக்கு: ஹாக்கி பயிற்சியாளர் கிரெய்க் appeared first on Dinakaran.

Tags : Craig ,New Delhi ,Craig Fulton ,Graham Reid ,men ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...